நடிகை பிரியங்கா மோகன் கன்னட திரைப்படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்ததன் மூலம், பல மொழிகளிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகையாக வளர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கன்னட மொழி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கி வருகிறார். இதில் நடிகர் சிவராஜ் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
1970களின் காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், நடிகை பிரியங்கா மோகன் தோன்றும் விதத்தை வெளிப்படுத்தும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் அமைந்துள்ள பிரியங்கா மோகனின் இந்த புதிய தோற்றம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
