நடிகை ருக்மணி வசந்த், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்திற்குப் பிறகு, ‘டாக்சிக்’ மற்றும் ‘என்டிஆர் – நீல்’ போன்ற பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை தற்போது கைவசம் வைத்துள்ளார். இதன் மூலம் அவர் பல மொழிகளிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்கு நடிகை ருக்மணி வசந்த் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘டாக்சிக்’ திரைப்படம் குறித்து அவர் பேசுகையில், நான் தற்போது ‘டாக்சிக்’ படத்தில் நடித்து வருகிறேன். இந்த திரைப்படத்தில், இதற்கு முன்பு நான் நடித்திராத முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இது எனக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ள படம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடிகர் யஷ் மற்றும் இயக்குநர் கீது மோகன்தாஸ் இந்த திரைப்படத்தை அணுகிய விதமும், படப்பிடிப்பை அவர்கள் மேற்கொண்ட முறையும் எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கியுள்ளது என தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
