இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, ஏற்கனவே தமிழில் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். தற்போது, அர்ஜித் ஷங்கர் விரைவில் கதாநாயகனாக ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தில் அர்ஜித்தின் ஜோடியாக நடிக்க நடிகை கிர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு, இந்த படத்தின் கதாநாயகி வேடத்திற்கு மமிதா பைஜூவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, ஹிந்தியில் பிரபலமான இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
