பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக, தயாரிப்பாளர்கள் 31 விநாடிகள் கொண்ட ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் சுனில் ஷெட்டி, அர்ஷத் வார்சி, பரேஷ் ராவல், ஜானி லீவர், ராஜ்பால் யாதவ், துஷார் கபூர், ஷ்ரேயாஸ் தல்படே, க்ருஷ்ணா அபிஷேக், கிகு ஷர்தா, தலேர் மெஹந்தி, மிகா சிங், ராகுல் தேவ், முகேஷ் திவாரி, ஷரிப் ஹாஷ்மி, இனாமுல்ஹக், ஜாகிர் ஹுசைன், யஷ்பால் சர்மா, ரவீனா டாண்டன், லாரா தத்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், திஷா பதானி மற்றும் வ்ரிஹி கோட்வாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் ஆரம்பத்தில் 2025 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் இந்த புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், படம் அடுத்தாண்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘வெல்கம்’ திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகமாக உருவாகியுள்ள இந்த படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
