விக்ரமின் நடிக்கும் அவரது 63வது படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் முழுமையான ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இதில் ரியா ஷிபு, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் விக்ரம் முதலில் சமையல்காரர் தோற்றத்தில் இடம்பெறுகிறார். பின்னர் ஆக்ஷன் பின்னணியில் அவர் பேசும் வசனங்களுடன் புரோமோ நகர்வது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘வீர தீர சூரன்’, ‘தங்கலான்’ படங்களுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றுள்ளது. ஆக்ஷன் களத்தில் விக்ரமின் புதிய தோற்றம் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டமாக இந்த புரோமோ அமைந்துள்ளது.
