“வாரணாசி டைம் டிராவல் படம் மட்டுமல்ல”… சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட பிரித்விராஜ்!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் நடித்து வரும் ‘வாரணாசி’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படம் குறித்து பேசிய பிரித்விராஜ், இதை வெறும் டைம் டிராவல் கதையாக மட்டும் பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

படத்தில் ஒரே காலகட்டத்தை மையமாகக் கொண்ட கதை இல்லாமல், பல்வேறு காலக்கட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வளவு பிரமாண்டமான முயற்சியை ராஜமவுலி போன்ற வித்தியாசமான இயக்குநரின் பார்வையில் உருவாக்கப்படுவதை படப்பிடிப்பு தளத்தில் இருந்து பார்ப்பதே தனக்கு வியப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாக குறிப்பிட்ட பிரித்விராஜ், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading