தனது வாழ்க்கையில் சந்தித்த வலிகள் மற்றும் சவால்களை எண்ணி கண்கலங்கிய நடிகர் சூரி!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த நடிகர் சூரி, தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாமன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியிருந்த இந்த படம், சூரியின் நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

இதனைத் தொடர்ந்து, இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி தனது அடுத்த படமாக ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், தனது வாழ்க்கையில் சந்தித்த வலிகள் மற்றும் சவால்கள் குறித்து பேசும்போது நடிகர் சூரி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

அவர் பேசுகையில், “பல கஷ்டங்களை தாண்டி சினிமாவில் ஒருவழியாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்துக்காக எனக்கு உடை அளவெடுக்கும்போது, கை கால்கள் நடுங்கி கண்ணே கலங்கியது. அப்போதே திடீரென அந்த கேரக்டருக்கு இன்னொருவரை ரெக்கமெண்ட் செய்துவிட்டார்கள். உடனே சட்டையை கழட்டச் சொன்னார்கள். அதே இடத்திலேயே நான் சட்டையை கழட்டினேன்” என தனது வலியைக் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading