சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்கியூட்டில் அஜித்குமார் பங்கேற்ற பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்த நிலையில், போட்டிக்கு பிறகு இருவரும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது அஜித் முதல்வர் விஜய்க்கு நினைவுப் பரிசு அளித்தார். பதிலுக்கு முதல்வர் விஜய்யும் பரிசளித்தார்.
அஜித்துக்கு அவரது ரேஸ் காரின் மினியேச்சர்-ஐ முதல்வர் விஜய் பரிசளித்தார். பதிலுக்கு ரேஸில் ஹெல்மெட்டை அஜித் முதல்வர் விஜய்க்கு பிரத்யேகமாக பரிசளித்தார். அதில்.. விஜய் அளித்த பரிசில் பிரியமுடன் விஜய்” to ‘ அன்பான சகோதரர் அஜித்த என எழுதப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
2026 லீ மான்ஸ் கோப்பை தொடரின் ஐந்தாவது சுற்றுதான் சில்வர்ஸ்டோனில் நடைபெற்றது. ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் ஏற்கனவே நான்கு சுற்றுகள் முடிந்திருந்த நிலையில், அஜித் எல்.எம்.பி3 புரோ/ஏ.எம் பிரிவில் ரோமைன் வோஸ்னியாக்குடன் இணைந்து போட்டியிட்டார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பந்தயத்தில் ரெட் ஆன்ட் அணி 38-வது இடத்தை பிடித்தது. விஜய்–அஜித் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
