குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கி, தற்போது இளம் ஹீரோவாக பல வெற்றிப்படங்களில் நடித்துவரும் நடிகர் தேஜா சஜ்ஜா, சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனக்கு எதிராக வந்த டிரோல்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

அவர் கூறுகையில், “ஒருவர் உடனடியாக திரையுலகில் பெரிய ஹீரோவாக மாறிவிட முடியாது. நம்மை நாமே நிரூபிக்க வேண்டும். வாய்ப்புகள் கிடைக்கும் வரை இந்தத் துறையில் தொடர்ந்து உழைக்க வேண்டும். உண்மையில், பெரிய நட்சத்திரங்களுக்கே டிரோல்கள் வருகின்றன. தேசிய விருதுகளை வென்ற படங்களைக்கூட விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள்.
இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி ஒருவன் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தால், அவனால் முன்னேற முடியாது. நமது திறமையை நம்பி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சரியான நேரம் வந்தால், நமது மதிப்பை அனைவரும் புரிந்து கொள்வார்கள்” என அவர் தெரிவித்தார்.
