விஜய் சாருடன் இன்னும் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது – இயக்குனர் நெல்சன்| JanaNayagan Audio Launch

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் நெல்சன், ஆடியோ லாஞ்சுக்கு அழைத்து வந்தார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தால், அர்ஜெண்டினா ஃபுட்பால் மேட்ச் மாதிரி பிரமாண்டமாக இருக்கிறது. மலேசியாவுக்கு வந்தும் விஜய் சாரை நேரில் பார்க்க முடியவில்லை.

இப்போ கூட ஸ்டேஜில் அவரைப் பார்த்தால், அவர் சிங்கப்பூரில் இருப்பது போல தெரிகிறது” என்று, நீளமான ராம்ப் வழியைக் காட்டி நகைச்சுவையாக பேசினார். தொடர்ந்து, “விஜய் சாருடன் இன்னொரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இன்னும் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading