என்னுடைய லியோவிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் லியோ -2 படத்திற்கான தேதிகளை தான் கேட்பேன் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‌| JanaNayagan Audio Launch

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ரசிகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “ ‘ஜன நாயகன்’ விஜய் அண்ணாவின் கடைசி படம் என்று சொல்வது கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனால், ஆல் தி பெஸ்ட் விஜய் அண்ணா. ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ படங்கள் என் இயக்குநர் பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்ற படங்கள்.

எனக்கு என்னுடைய லியோவிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால், ‘லியோ -2’ படத்திற்கான தேதிகளை கேட்பேன். அதற்கு அவருடைய பதில் ‘ப்ளடி ஸ்வீட்’ என்பதாகத்தான் இருக்கும். அவருடைய பெருங்கனவு வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் என உருக்கமாக பேசினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading