Tuesday, May 7, 2024

விஜய் அப்படி இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்காது… த்ரிஷா சொன்ன சீக்ரெட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது மிகப்பெரிய ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தளபதி விஜய். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துவருகிறார் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வமற்ற தகவல் உலாவருகின்றன.‌அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்த விடுக்கிறேன் என அறிவித்திருந்தார்.இந்தச் சூழலில் விஜய் குறித்து திரிஷா பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகி‌ இருக்கிறது.

பல ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடி யார் என்றால் அதில் டாப்-ல் இருப்பவர்கள் தான் விஜய்யும், திரிஷாவும். இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்தனர். இந்த நான்கு படங்களில் ஆதி, குருவியை தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின.இருவரது கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனதாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவியது.பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தில் இந்த ஜோடி இணைந்த போது ரசிகர்கள் துள்ளினர்.

இச்சமயத்தில் விஜய் குறித்து திரிஷா அளித்த பழைய பேட்டி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், ஷூட்டிங்கின் இடைவேளையில் விஜய் பெரும்பாலும் அமைதியாகவே இருப்பார். அவர் அப்படித்தான். யாரிடமும் பேசமாட்டார்.

இப்படி ஷூட் முடிந்தால் போதும் ஒரு சேரை எடுத்துப்போட்டுக்கொண்டு சுவருக்கு பக்கத்தில் அமர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருப்பார். சில சமயம் அவர் அமைதியாக இருப்பதை பார்த்தால், ஏதோ நாம் தவறு செய்துவிட்டோமோ என்றுகூட தோன்றும். அவரது அந்த அமைதி எனக்கு சுத்தமாகவே பிடிக்காத என்றார். இந்தப் பேட்டியை ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

Read more

Local News