Tuesday, May 7, 2024

ராயன் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்-ஐ வெளியிட்ட தனுஷ்! ராயன் ராவணனாக அவதாரம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இந்தப்படத்தில் காளிதாஸ், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, செல்வ ராகவன், துஷாரா விஜயன், ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ப பாண்டி படத்திற்கு பிறகு தற்போது தனுஷ் இயக்கிருக்கும் படம் தான் ராயன்.

ராயன் திரைப்படம் இந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகும் என்ற கூறப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை தனுஷ் வெள்ளியிட்டுள்ளார்.

வரும் மே 9ம் தேதி ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகள் தாமதமாகி வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின் இதுதான் படத்தின் ரிலீஸ் தாமதத்திற்கு இது காரணமாக என்று சொல்லப்பட்டது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன்களை துவக்கியுள்ளது படக்குழு.

தனுஷ் வெளியிட்ட போஸ்டரில் வித்தியாசமான பின்னணியில் ராவணனின் உருவம் உள்ளது அதன் முன்னதாக அமர்ந்திருக்கிறார் தனுஷ் அதேசமயம் இந்த போஸ்டரில் தனுஷ் நேர்க்கொண்ட பார்வையுடன் காணப்படுகிறார்.

- Advertisement -

Read more

Local News