‘டோரதி’ படத்தை பார்த்து நெகிழ்ந்த மாரி செல்வராஜ் – கார்த்திக் சுப்புராஜுக்கு பாராட்டு!

L

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜும் படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

படம் பார்த்த அனுபவத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், தாமதமாக படத்தை பார்த்தாலும் அது தனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் இருக்கும் அழுகை, ஆசை, கனவு, நம்பிக்கை, துரோகம் உள்ளிட்ட உணர்வுகளை எந்தவித சமரசமும் இல்லாமல் படமாக்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் ராஜா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது அன்பையும் வாழ்த்துகளையும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading