ராதிகா சரத்குமார் மற்றும் லியோ சிவகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை நானி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘அழகியே கண்ணே’, ‘சாமானியன்’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ உள்ளிட்ட படங்களில் இதுவரை துணை கதாபாத்திரங்களில் நடித்த லியோ சிவகுமார், ‘டெலிவரி பாய்’ மூலம் கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்குகிறார். அவருடன் காளி வெங்கட், பிரிகிடா சாகா, ஜென்சன் திவாகர் மற்றும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அசாசி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அமுதா லியோனி மற்றும் லெனின் மாதேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஹீரோவாக லியோ சிவகுமாரின் முதல் படம் என்பதால் ‘டெலிவரி பாய்’ மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
