திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை தமன்னா… வைரல் கிளிக்!

நடிகை தமன்னா தனது தந்தையுடன் திருப்பதி திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் பாரம்பரிய உடையில் சாமி தரிசனம் செய்து சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்றார்.

தரிசனத்துக்குப் பின்னர் ரங்கநாயக்கலு மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் தமன்னாவுக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசீர்வாதம் வழங்கினர். தொடர்ந்து அவருக்கு தீர்த்தப் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. கோவிலில் இருந்து வெளியே வந்தபோது தமன்னாவை பார்த்த பொதுமக்களும் ரசிகர்களும் அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர்.

அப்போது சிறுவன் ஒருவர் தமன்னாவிடம் செல்ஃபி கேட்டுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமன்னா, சிறுவனுடன் அன்பாக பேசியபடியே புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த எளிமையான தருணம் அங்கிருந்த ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இதனிடையே, தமன்னா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘புருஷன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தியில் ஐந்து புதிய படங்களிலும் நடித்து வரும் அவர், வெப் தொடர்கள் மற்றும் தொழில் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading