Advertisement

ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்கள்… வித்யா ராம்ராஜ்-ஐ நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என ஒரே தொடரில் 3 பதக்கங்களை வென்று கவனம் ஈர்த்தார்.

இதுமட்டுமின்றி, தடகளத்தில் பி.டி.உஷா 42 ஆண்டுகளாக வைத்திருந்த தேசிய சாதனையையும் முறியடித்து வித்யா ராம்ராஜ் புதிய வரலாறு படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், நடிகர் தனுஷும் வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து அவரது சாதனையை பாராட்டியுள்ளார்.

–

Add a Comment

Leave a Reply