“என்னை விட நல்ல கதைகள் அவர்களிடம் இருக்கிறது!” – உதவி இயக்குநர்களுக்காக இயக்குநர் ராஜா கருப்பசாமி வைத்த கோரிக்கை!

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் எதிர்பார்த்ததை விட சிறப்பான வசூலை பெற்ற இப்படம், கடந்த 21-ம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியானது. திரையரங்க வெளியீட்டைப் போலவே ஓடிடியிலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘மொத ராத்திரி’ படத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜா கருப்பசாமி, தன்னைப் போலவே பல உதவி இயக்குநர்கள் நல்ல கதைகளுடன் தங்களது முதல் பட வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

“எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர்களே 10 கதைகளை வைத்திருக்கிறார்கள். எப்படியாவது ஒரு நல்ல படம் பண்ண வேண்டும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னை விட நல்ல கதைகள் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்” என்று கூறிய அவர், முதல் பட வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் உதவி இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என மேடையில் கோரிக்கை வைத்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை போலவே திறமையான புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற அவரது இந்த வேண்டுகோள் நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading