ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. 2017-ல் வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தை சுந்தர்.சி மற்றும் குஷ்பு தயாரித்துள்ளனர்.
இசை உலகை பின்னணியாக கொண்ட இப்படத்தில், இசையை வாழ்க்கையாக நினைத்து பயணிக்கும் மனிதர்களின் கனவுகள், அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அந்தப் பயணத்தில் ஏற்படும் உணர்வுகள் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் தொடர்பாக பேசிய கெட்டிகா சர்மா, ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் உற்சாகமாக கொண்டாட வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த ஆசை தற்போது ‘மீசைய முறுக்கு 2’ மூலம் நிறைவேறியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதோடு நிறுத்திக்கொள்ளாமல், ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விக்கும் வகையில் பல புதிய விஷயங்களை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கெட்டிகா சர்மா தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் ஒவ்வொரு முயற்சியாக அதை செயல்படுத்தி காட்டுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
—
