வழக்கறிஞர்களாக மோதும் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின்! ‘சத்யவான் சாவித்திரி’ டிரெய்லர் வெளியீடு!

நீதிமன்றப் பின்னணியில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷும் மிஷ்கினும் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில், கீர்த்திக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை மிஷ்கின் ஏற்றுள்ளார்.

இந்த படத்தில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம். சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணைந்து நடித்துள்ள விதமும், மாறுபட்ட கதைக்களமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Add a Comment

Leave a Reply