ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடித்து வரும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ராஜமௌலியிடம் சூர்யாவுடன் இணைந்து படம் இயக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், இந்தக் கேள்வி வரும் என்று தெரிந்தே அதற்கான பதிலுடன் வந்ததாகக் குறிப்பிட்டார். தற்போது நடைபெறும் விழா ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்கானது என்பதால், தானும் சூர்யாவும் இணையும் படம் பற்றி பேசினால் அதுவே முக்கிய செய்தியாகிவிடும் என்றும், அது இந்தப் படத்தின் மீதான கவனத்தை திசைதிருப்பிவிடும் என்றும் ராஜமௌலி தெரிவித்தார்.
அதே நேரத்தில், எதிர்காலத்தில் தானும் சூர்யாவும் இணைந்து படம் உருவாக்கினால் அது நிச்சயம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து சூர்யாவிடம் பேசிய ராஜமௌலி, சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். சூர்யாவுக்கு கிடைத்த இந்த தொடர் வெற்றிகளை “டபுள் தமாகா” என்றும் ராஜமௌலி குறிப்பிட்டார்.
—
