‘தடம்’, ‘தாராள பிரபு’, ‘கிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் தான்யா ஹோப். நடிப்புடன் அவரது நடனத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். குறிப்பாக ‘தாராள பிரபு’ படத்தில் இடம்பெற்ற பாடலில் அவரது நடன அசைவுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன.சில ஆண்டுகள் திரைப்படங்களில் இருந்து விலகியிருந்த தான்யா ஹோப், சமீபத்தில் வெளியான ‘நிறம்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் கவனம் பெற்றார். தற்போது ‘கோல்மால்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தான்யா ஹோப் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. முந்தைய புகைப்படங்களுடன் ஒப்பிடும்போது அவரது தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அவரது உடல் எடையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனித்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அவரது தற்போதைய தோற்றம் குறித்து ஆச்சரியத்தையும், உடல் எடை குறைப்பு தொடர்பாக தங்களது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
