ராஷி கன்னா தற்போது பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ராஷி கன்னாவிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றியது மிகவும் அற்புதமான அனுபவம் என்று தெரிவித்த ராஷி கன்னா, தற்போது அவர் தனக்கு நண்பராகிவிட்டதாகக் கூறியுள்ளார். தான் தொடர்ந்து பல கேள்விகளை கேட்டாலும், ரஜினிகாந்த் எப்போதும் புன்னகையுடன் பொறுமையாக பதிலளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்றும், அவ்வப்போது தன்னை கேலி செய்வார் என்றும் ராஷி கன்னா தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த இணை நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர் என்றும், அவரை அருகில் இருந்து கவனிப்பதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் ‘தர்மன்’ படத்தில் ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
—
