உறியடி விஜய்குமாரின் ‘அறிவு’… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘அறிவு’. டி. இமான் இசையமைக்கும் இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். மோட்டிவ்ட்ரோன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரித்துள்ளார். பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவர்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

மூணாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மலைக் கிராமங்களுக்கு கல்வியைக் கொண்டு செல்லும் நாயகனைச் சுற்றி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சமூகப் பிரச்சினைகளையும் பெண்களின் உரிமைகளையும் பேசும் கதைக்களம் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுபிக்‌ஷாவும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், ‘அறிவு’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply