நவம்பர் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சர்வானந்தின் ‘போகி’ திரைப்படம் தற்போது தள்ளிப்போகியுள்ளது. படத்தைப் பார்வையிட்ட தணிக்கைக் குழுவினர் மறுதணிக்கைக்கு அனுப்பியதே இதற்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பத் நந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சர்வானந்த் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் டிம்பிள் ஹையாதி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
தெலங்கானா – மகாராஷ்டிரா இடையே நிலவிய எல்லைப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்து இளைஞராக சர்வானந்த் நடித்துள்ள நிலையில், கந்துலா சுலோசனா ராணி என்ற கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் காரணமாகவே மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் 12-ம் தேதி படம் வெளியாகாது.
