ஹிப் ஹாப் ஆதி இயக்கி, இசையமைத்து, கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், திரையரங்குகளிலும் பாடல்களுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ‘ஆரா 10/10’ பாடல் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.
இதனிடையே, ‘மீசைய முறுக்கு 2’ படத்தை பார்த்த இசையமைப்பாளர் தேவா, ஹிப் ஹாப் ஆதியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கானா இசையை கரையிலிருந்து திரைக்கு கொண்டு சென்ற ஹீரோ என தேவாவை குறிப்பிட்டுள்ள ஆதி, அவர் தனது படத்தை பார்த்து பாராட்டியது மிகப்பெரிய அங்கீகாரம் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “இது போதும் எனக்கு… இது போதுமே” என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
