இயக்குநர் கே.பி. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஜெயில் மேட்ஸ்’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் தி ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கே.பி. ஜெகன், விஜய் வர்மா, சனாஷ்கா ஸ்ரீ, மோனிகா சந்தோஷ், எம்.எஸ். பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள கே.பி. ஜெகன், ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
