மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘ஆர்.டி.எக்ஸ்’. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘I Am Game’. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் கதிர் கிரிக்கெட் வீரராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத் திரையுலகில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவர் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘I Am Game’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசிய கதிர், “ஒருநாள் லோகேஷ் அண்ணா எனக்கு தொலைபேசியில் அழைத்து, ‘மலையாளத்தில் வெளியான ஆர்.டி.எக்ஸ் திரைப்படத்தை பார்த்திருக்கிறாயா? அந்தப் படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் உன்னை சந்திக்க விரும்புகிறார். ஆனால், அவரிடம் நீ கதையை கேட்க வேண்டிய அவசியமில்லை. நான் ஏற்கெனவே கதையை கேட்டுவிட்டேன். எனது பொறுப்பில் உனக்கு உத்தரவாதம் தருகிறேன்’ என்று கூறினார். லோகேஷ் அண்ணா என் மீது வைத்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையே, இந்தப் படத்தில் நடிக்க என்னை சம்மதிக்க வைத்தது” என்று தெரிவித்துள்ளார்.
—
