‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? உலாவும் புது தகவல்!

அஜித்குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணையும் ‘டேர் டெவில்’ திரைப்படம் குறித்து புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து உருவாகும் இந்த திரைப்படம் அஜித்குமாரின் 64-வது படமாக கூறப்படுகிறது. ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ‘டேர் டெவில்’ படத்தின் நடிகர் தேர்வு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இந்தப் படத்தில் ஷாலினி அஜித்குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்ற தகவல் பரவியது. ஆனால், அந்த தகவலுக்கு ஷாலினி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் நடிகையாக கேமரா முன் தோன்றும் எண்ணம் தற்போது இல்லை என்றும், இனி திரைப்படங்களில் திரைக்குப் பின்னால் இருந்து தனது பங்களிப்பை வழங்கவே விரும்புவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading