துரந்தர் வேறு… சர்தார் வேறு… சர்தார் 2 உங்களை ஆச்சரியப்பட வைக்கும்‌…– இயக்குனர் பி.எஸ்.மித்ரன்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னையில் நடைபெற்ற இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் மித்ரன், ‘சர்தார் 2’ குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக இணைந்து நடித்திருப்பதே படத்தின் முக்கியமான அம்சம் என குறிப்பிட்டார். மேலும், முதல் பாகத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்துடன் இடம்பெற்றிருந்த முருகர் தொடர்பான அம்சங்களும் இந்தப் பாகத்தில் தொடர்வதாக தெரிவித்தார்.

ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’, ஏற்கெனவே வெளியான ‘விஸ்வரூபம்’ போன்ற படங்களின் வரிசையில் இடம்பெறும் என்றும் மித்ரன் கூறினார். தற்போது முருகர் தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், ‘சர்தார்’ முதல் பாகத்திலேயே இந்த அம்சம் இடம்பெற்றிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அதேசமயம், சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ படத்துடன் ‘சர்தார் 2’ படத்தை ஒப்பிட வேண்டாம் என நகைச்சுவையாக கேட்டுக்கொண்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading