பகத் பாசிலின் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவரான பகத் பாசில், தற்போது ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ என்ற புதிய படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார். ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் பகத் பாசிலுக்கு, இந்தப் படம் மற்றொரு வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது.

பேன்டசி மற்றும் மாயாஜால அம்சங்கள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், பகத் பாசில் மேஜிக் கலைஞராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் குழந்தை நட்சத்திரம் சாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இருவரையும் சுற்றி நகரும் சுவாரஸ்யமான பயணமே படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘புஷ்பா’ படத்தில் பகத் பாசிலுடன் நடித்த சவுரப் சக்தேவாவும் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாக உள்ளது. முன்னதாக செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading