‘மைசா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘மைசா’. ரவிந்திர புள்ளே இயக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து வருகிறார்.

அதிரடி ஆக்‌ஷன் அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘மைசா’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரஷ்மிகா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading