என்னுடைய ஃபேவரைட் நடிகர் தனுஷ் தான்! – கயாடு லோஹர்

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து கவனம் பெற்று வரும் நடிகை கயாடு லோஹர், ரசிகர்களுடனான சமீபத்திய சமூக வலைதள உரையாடலில் தனக்கு பிடித்த தமிழ் ஹீரோ குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தனுஷ் மீதான தனது விருப்பத்தை உற்சாகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் யார் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, தனுஷின் பெயரை கயாடு லோஹர் குறிப்பிட்டுள்ளார். “தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டும்தான்” என அவர் கூறியதுடன், அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவரை தனுஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கயாடு லோஹருக்கு அமையவில்லை. இருப்பினும், தனுஷ் இயக்கி நடித்த ‘காரா’ திரைப்படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. மற்ற படங்களின் படப்பிடிப்பு தேதிகளுடன் கால்ஷீட் சிக்கல் ஏற்பட்டதால் அந்த வாய்ப்பை அவரால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading