‘இம்மார்டல்’ வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் … ஜிபி.பிரகாஷ் நம்பிக்கை!

‘இம்மார்டல்’ திரைப்படம் மூலம் நடிகராக ஜி.வி.பிரகாஷ் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளார். மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்துள்ளார். அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

படம் குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ், ஹாலிவுட்டில் நீண்ட காலமாக பிரபலமாக இருக்கும் வேம்பயர் கதைக்களம், தமிழ் சினிமாவுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில்தான் ‘இம்மார்டல்’ உருவாகியுள்ளதாகவும், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், தனது தொழில் வாழ்க்கையில் கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்றுவதை முக்கியமான கொள்கையாக கடைப்பிடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் இசைத்துறைக்கு உதவும் ஒரு கருவியாக இருக்கலாம் என்றாலும், அதையே முழுமையாக சார்ந்திருப்பது சரியல்ல என்றும் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து புதுமையான கதாபாத்திரங்களிலும், புதிய களங்களிலும் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading