“கார்த்தி தொடர்ந்து என்னை ஆச்சரியப்பட வைக்கிறார்– நடிகர் சூர்யா பாராட்டு!

‘சர்தார் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சூர்யா, படக்குழுவினரையும் நடிகர்கள் கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை பார்த்தபோது, இவ்வளவு தரமான ஸ்பை த்ரில்லர் படத்தை தமிழில் உருவாக்கியிருப்பது ஆச்சரியமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக சூர்யா கூறினார். தனக்குத் தெரியாத பல தகவல்களை படத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாகவும், சமீப காலங்களில் தமிழில் ஒரு ஸ்பை த்ரில்லர் இவ்வளவு இயல்பாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டிருப்பதை பார்த்ததில்லை என்றும் அவர் பாராட்டினார். மேலும், படத்தை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்க்கும் முக்கியமான பலமாக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு நடிகரை விட அவர் நடித்த கதாபாத்திரம் அதிகமாக பேசப்படுவது மிகப்பெரிய பலம் எனக் கூறிய சூர்யா, கார்த்தியை தாண்டி ‘சர்தார்’ என்ற கதாபாத்திரம் ரசிகர்களின் நினைவில் நிற்பதே அதற்கான உதாரணம் என்றார். கார்த்தி தொடர்ந்து தன்னை ஆச்சரியப்படுத்தும் வகையில் முக்கியமான படங்களைத் தேர்வு செய்து வருவதாகவும், ‘சர்தார் 2’ அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading