விமானத்தில் ரஜினியை சந்தித்த கயாடு லோஹர்!

நடிகர் ரஜினிகாந்தும் நடிகை கயாடு லோஹரும் சமீபத்தில் விமானத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கயாடு லோஹர், ரஜினிகாந்தின் தீவிர ரசிகையாக இருக்கும் தனக்கு அவருக்கு அருகில் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ரஜினியை பார்த்த அந்த தருணத்தில் ‘சுந்தரி’ பாடல் தனது மனதில் ஒலிக்கத் தொடங்கியதாகவும், எதிர்காலத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரஜினிக்கு அருகில் தான் உருளைக்கிழங்கு போல் இருப்பதாக அவர் நகைச்சுவையாக கூறியுள்ளதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading