தன்னுடைய டூப் நடிகருக்கு சல்மான் கான் செய்த மிகப்பெரிய உதவி!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பல ஆண்டுகளாக பாடி டபுளாக பணியாற்றி வந்தவர் பர்வேஸ் காஜி. சமீபத்தில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனையில் இதயப் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை அவசியமான சூழல் உருவானது. இந்த தகவலை அறிந்த சல்மான் கான், உடனடியாக பர்வேஸ் காஜிக்கு உதவ முன்வந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிப்பது முதல் அறுவை சிகிச்சைக்கான தேவையான மருத்துவ ஏற்பாடுகள் வரை அனைத்தையும் தனது மேற்பார்வையில் கவனித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், சிகிச்சை எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் செய்துகொடுத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading