திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி!

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த ‘காந்தாரா, காந்தாரா சாப்டர் 1’ ஆகிய திரைப்படங்கள் கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இப்படத்தையடுத்து ரிஷப் ஷெட்டி ‘அனுமான்’ மற்றும் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ அகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி சரிசனம் செய்து வெளியே வந்த பின்னர் அவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading