400 மரங்களை வளர்த்து பசுமை இல்லமாக மாற்றிய சுனில் ஷெட்டி!

தமிழ் ரசிகர்களுக்கு ‘12 B’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுனில் ஷெட்டி. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை அருகே உள்ள காண்டாலா பகுதியில் நிலம் ஒன்றை வாங்கியபோது, அந்த இடம் மரங்கள் எதுவுமின்றி வறண்ட பாலைவனத்தைப் போன்று இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு தனது கனவு இல்லத்தை உருவாக்கிய சுனில் ஷெட்டி, வீட்டைக் கட்டியதோடு மட்டும் நின்றுவிடாமல் அதன் சுற்றுப்புறங்களில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் 400 மரங்களை நட்டு வளர்த்துள்ளார். தொடர்ந்து 16 ஆண்டுகள் பராமரித்ததன் பலனாக, தற்போது அந்தப் பகுதி பசுமையான வனப்பகுதி போன்று மாறியுள்ளது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை விரும்பும் சுனில் ஷெட்டி, தனது கனவு இல்லமும் இயற்கையான சூழலில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading