ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் சூரி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “மொத ராத்திரி படத்தின் தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தாலும், படத்தை பார்த்த பிறகு இதுதான் சரியான தலைப்பு என்று தோன்றியது. படம் வேற லெவல்… நிச்சயம் வெற்றி பெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் அனிஷ்மா அனில்குமார், 2023-ல் வெளியான மலையாள திரைப்படமான ‘பூவன்’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வெளியான ‘சிறை’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
