‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மாவின் தங்கையாக நடித்துள்ள வர்ஷினி கார்மேகம், குறும்படங்கள் மற்றும் மேடை நாடகங்கள் வழியாக நடிப்பில் அனுபவம் பெற்றுள்ளார். தற்போது இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். முறைப்படி பரதநாட்டியம் பயின்றுள்ளதுடன், பல மொழிகளையும் கற்றுள்ள வர்ஷினி, குறிப்பாக ஹிந்தி தெரிந்திருப்பது ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வாய்ப்புகளை தேடிச் செல்ல உதவும் என தெரிவித்துள்ளார். மேலும், தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய், ஷோபனா ஆகியோரை தனது முன்மாதிரிகளாக குறிப்பிட்டுள்ள அவர், சாய் பல்லவியின் இயல்பான நடிப்பும், தனுஷின் பன்முகத்தன்மை மற்றும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனும் தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Add a Comment
