பிரித்விராஜ் நடிப்பில் தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘கலிபா’ திரைப்படம், நாயகனுக்கும் கேங்ஸ்டருக்கும் இடையேயான மோதலை கதைக்களமாக கொண்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ‘கலிபா’ திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.30 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.
Add a Comment
