ஓணம் பண்டிகையை முன்னிட்டு நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தொடக்கத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ.63 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
