நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தை ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜென் மார்டின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே ‘கண்ணக்குழியா’, ‘ரசகுல்லா’, ‘பச்ச புள்ள’ என மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக விஷ்ணு எடவன் எழுதிய வரிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ‘கண்ணக்குழியா’ பாடல் வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
முதலில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘ஹாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் பின்னர் ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதனை அறிவிக்கும் வகையில் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் மற்றொரு பாடலான ‘குடிகார நெஞ்சு’ தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சியான் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரம் இப்பாடலை பாடியுள்ளார்.
—
