சாய் அபயங்கரின் 6-வது இன்டீ பாடல் ‘ராதிமா’ வெளியாகி வைரல்!

தமிழில் ஆல்பம் பாடல்களின் மூலம் இளம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு வரவேற்பை உருவாக்கியவர் சாய் அபயங்கர். அவரது பாடல்கள் பெற்ற கவனத்தை தொடர்ந்து, திரைப்படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. இதன் மூலம் இன்டீ இசையிலிருந்து சினிமா இசை வரை தனது பயணத்தை அவர் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார்.

திரைப்பட இசையமைப்பாளராக சாய் அபயங்கருக்கு அறிமுகத்தை கொடுத்தது ‘டியூட்’ திரைப்படம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ‘மார்ஷல்’, அட்லி இயக்கும் படம், பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம், தனுஷின் ‘ஓம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

சினிமா பணிகளுக்கு மத்தியில் இன்டீ இசையிலும் சாய் அபயங்கர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். வித்தியாசமான இசை முயற்சிகள் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கி வரும் அவர், தற்போது தனது 6-வது இன்டீ பாடலான ‘ராதிமா’வை வெளியிட்டுள்ளார். இந்த இசை ஆல்பத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், சாய் அபயங்கருடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading