மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில் தேனி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாரதிராஜாவின் ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அவரது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Add a Comment
