“பொதுவாக அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தேடல் இருக்கும். ஆனால், எனக்கு அப்படியொரு தேடல் எதுவும் இல்லை. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து வருகிறேன். நான் திட்டமிட்டு செய்த சில விஷயங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால், ‘செய்துதான் பார்ப்போமே’ என்று முயற்சி செய்த விஷயங்கள் அனைத்துமே எனக்கு கைகொடுத்திருக்கின்றன. இதனால்தான் தற்போது திட்டமிடுவதை விட்டுவிட்டேன். ஒரு கதையை கேட்கும்போதுகூட பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதை உடனடியாக முடிவு செய்துவிடுவேன். இப்படியான வாழ்க்கை முறையை நானும் ரசிக்கிறேன்” என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
Add a Comment
