யூடியூப் தளத்தில் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட கர்ரி பார்க்கர் இயக்கத்தில், மைக்கேல் ஜான்ஸ்டன், இன்டே நவர்ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஹாரர் திரைப்படம் ‘அப்செஷன்’. கடந்த மே 15-ம் தேதி வெளியான இப்படம், சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் தற்போது 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.4,780 கோடியாகும். வெறும் ரூ.67 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஹாலிவுட் திரையுலகில் இப்படியொரு வசூல் சாதனை பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
