மறைந்த கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் அலங்காரம் செய்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதனிடையே, திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் மட்டுமின்றி, ஏராளமான ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரிலும் தங்களது நினைவுகளை பகிர்ந்து விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Add a Comment
