சூர்யவம்சம் படத்திற்கு பிறகு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் மிகவும் பிடித்துள்ளது – நடிகை ராதிகா!

சென்னையில் நடைபெற்ற ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகைகள் மமிதா பைஜூ, பவானிஸ்ரீ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ராதிகா சரத்குமார், சூர்யா பல ஆண்டுகளாக மனதளவில் சந்தித்து வரும் போராட்டங்களை தான் பார்த்திருப்பதாகவும், அவை வெளியில் தெரியாத வகையில் இருந்ததாகவும் தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள வெற்றியை அவரது அந்தப் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஆரம்ப காலத்தில் சூர்யாவுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக குறிப்பிட்ட ராதிகா, தற்போது அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதாக பாராட்டினார். தனக்கு மிகவும் பிடித்த குடும்பப் படங்களில் ‘சூர்யவம்சம்’ முக்கியமானது என்றும், அதற்குப் பிறகு ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் மிகவும் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தார். சரத்குமாருடன் இணைந்து இந்தப் படத்தை ரசித்துப் பார்த்ததாகவும், அவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறினார். மேலும், படம் பார்த்த பிறகு நடிகர் சிவகுமாரும் நீண்ட நேரம் தன்னுடன் பேசியதாக ராதிகா தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading